தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் இதோ – TN Village Assistant Job Recruitment Details 2024
TN Village Assistant Job Recruitment Details 2024
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணிக்கு எவ்வளவு சம்பளம், கல்வித் தகுதி என்ன இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
For More Job Info Join:
கிராம உதவியாளர்கள் பணி:
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழ் கிராம உதவியாளர்கள் பணி நியமிக்கப்படுகிறது. கிராம உதவியாளர்கள், வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதாகும்.
கிராம உதயியாளர் பணிக்கு அடிப்படைத் தகுதி குறைந்தபட்சம் 5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட பதவிக்கான வட்ட எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். வண்டி ஓட்டும் திறன் இருக்க வேண்டும். கிராம உதயியாளர் பணிக்கு நியமனம் செய்யப்படுபவர் இருதார மணம் செய்திருக்கக் கூடாது.
வயது வரம்பு:
கிராம உதவியாளர் பதவிக்கு வயது வரம்பு, ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும். அதே போல, குறைந்தபட்ச வயது அனைத்து பிரிவினருக்கு 21க்கு மேல் இருக்க வேண்டும்.
காலிப்பணியிட விவரங்கள்:
மாவட்டவாரியாக கிராம உதவியாளர் பணி காலியிடங்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அரியலூர் – 21, சென்னை 20, செங்கல்பட்டு-41, கோயம்புத்தூர்-61, கடலூர் – 66, திண்டுக்கல் – 29, தருமபுரி – 39, ஈரோடு – 141, காஞ்சிபுரம் – 109, கரூர் – 27, கிருஷ்ணகிரி -33, மதுரை – 155, மயிலாடுதுறை – 13.
நாகப்பட்டினம் – 68, நாமக்கல் – 68,பெரம்பலூர் – 21, புதுக்கோட்டை – 27, ராமநாதபுரம் – 29, ராணிபேட்டை 43, சேலம் – 105,சிவகங்கை – 46, தஞ்சாவூர் – 305, தேனி-25, திருவண்ணாமலை – 103, திருநெல்வேலி – 45, திருப்பூர் – 102, திருவாரூர் – 139, திருவள்ளூர் – 151, திருச்சி – 104. தூத்துக்குடி – 77, தென்காசி – 18, திருப்பத்தூர் -32, விருதுநகர் – 38, வேலூர் – 30, விழுப்புரம் – 31 ஆகும்.
கிராம உதவியாளர் பணிக்கான சம்பளம்:
கிராம உதவியாளர் பணிக்கான சம்பளம் Special Time Scales of pay Matrix Level 6 குறைந்தபட்சம் ரூபாய் 11100- அதிகபட்சம் ரூபாய் 35100 ஆகும்.
தேர்வு செய்யும் முறை:
கிராம உதவியாளர்கள் பணிக்கான தேர்வு செய்யும் முறையானது, திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு, சாண்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
திறனறிதல் தேர்வுவாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இருக்கும். எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணியிடம் எப்போது வெளியிடப்படும்:
கிராம உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதமே வெளியிடப்பட்டு இருந்தது. தேர்தல் காரணமாக அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. தற்போது தேர்தல் முடிந்த சூழ்நிலையில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு தமிழக அரசின் https://www.tn.gov.in, வருவாய் நிருவாகத் துறையின் இணையதளம் (https://cra.tn.gov.in) மற்றும் அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வமான இணையதளத்தை அவ்வப்போது பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.