
அடுத்த வாரம் 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு…!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்து வருகிறது. மேலும், சில இடங்களில் அவ்வப்போது வெப்ப சலனம் காரணமாக மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்தவாரம் வானிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஏப்ரல் 2 ம் தேதியும், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஏப்ரல் 3 ம் தேதியும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் மிதமான