டிஎன்பிஎஸ்சி மூலம் 10000 பணியிடங்களை இன்னும் சில மாதங்களில் நிரப்ப அரசு திட்டம்! தேர்வர்கள் மகிழ்ச்சி – TNPSC Decided to Fill 10000 Post 2024 Year
TNPSC Decided to Fill 10000 Post 2024 Year
டிஎன்பிஎஸ்சி மூலம் இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள், மேலும் 10 ஆயிரம் பேரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ள தமிழக அரசு, அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேரை தேர்வு செய்ய திட்டமிட்டிருக்கிறது.
பல லட்சம் காலி பணியிடங்கள்:
தமிழக அரசு பணியில் பல லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக அரசு ஊழியர்கள் தரப்பில் வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக குறைவு.. பல அரசு துறைகளில் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளன. அண்மையில் நடந்து முடிந்த குரூப் 2, 2ஏ தேர்வுகளின் மூலம் 5,860 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதேபோல் குரூப் 4 பணியிடங்களை பொறுத்தவரை சுமார் 10000 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இப்படி பல்வேறு அரசு தேர்வாணைய முகமைகள் மூலமாக இரண்டரை ஆண்டுகளில் மொத்தம் 60,567பேருக்கு அரசுப்பணி நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
10 ஆயிரம் பேர் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு:
இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள், மேலும் 10 ஆயிரம் பேர் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்து. மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் புதிய அரசுப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில் எவ்விதமான தடங்கலும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையின் படி, குரூப் 1, குரூப்-2, குரூப்-4 உள்பட 19 போட்டித்தேர்வுகள் மூலம் பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளது. முதலில் குரூப் 4 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
குரூப் 4 தேர்வு:
இந்த முறை நடத்தப்பட உள்ள குரூப் 4 தேர்வின் மூலம் மொத்தமாக 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கிறது. 108 விஏஓ பணியிடங்கள், 2,442 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் வனக்காவலர் பணியிடங்கள் குரூப் 4 தேர்வில் இந்த ஆண்டு இடம் பெற்றுள்ளன.
குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.இதேபோல் வன காப்பாளர் தேர்வுக்கான (1,264 காலியிடங்கள்) அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிட்டு, ஜுன் மாதம் தேர்வு நடத்தப்பட உள்ளது. குரூப்-1 தேர்வுக்கான (65 காலியிடம்) அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு ஜூலை மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான (1,294 காலியிடம்) அறிவிப்பு மே மாதம் வெளியிட்டு, அதற்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தேர்வு கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.