
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் தேதி – தேர்வாணையத்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தேர்வர்கள் மகிழ்ச்சி
TNPSC Group 4 Result Announcement: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சியானது குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடத்தியது. இந்த குரூப்-4 தேர்வானது மொத்தம் 6244 பணியிடங்களுக்காக நடத்தப்பட்டது. குரூப் 4 தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர் ஜூனியர் அசிஸ்டன்ட் டைப் ஈஸ்ட் வன காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிறுவப்பட உள்ளன.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வுக்கு அப்ளை செய்து 15.8 லட்சம் பேர் தேர்வை எழுதினர். தமிழக முழுதும் 7247 தேர்வு மையங்களில் ஜூன் ஒன்பதாம் தேதி இந்த தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

குரூப் 4 தேர்வின் Answer Key:
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வின் அபிஷியல் ஆன்சர் Key ஆனது ஜூன் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை பல்வேறு தரப்பினர் பார்த்து வெரிஃபை செய்தனர். அதற்கு அடுத்தபடியாக குரூப்-4 தேர்வின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்து வந்தனர்.
குரூப் 4 தேர்வு ரிசல்ட்:
முன்னதாக குரூப்-4 தேர்வின் முடிவானது ஜனவரி மாதம் வெளியிடப்படும் என தேர்வு ஆணையத்தால் அறிவிப்பின் போது தகவல் வெளியாய் இருந்தது. டிஎன்பிஎஸ்சி புதிய தலைவர் பதவி ஏற்றபின் அவர் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக தற்போது குரூப் 4 தேர்வின் ரிசல்ட் ஆனது அடுத்த மாதம் அக்டோபரில் வெளியாகும் என தற்போது டிஎன்பிசி யால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் டிஎன்பிஎஸ்சி யின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 4 தேர்வை எழுதி ரிசல்ட் காக காத்துக் கொண்டிருக்கும் தேர்தல்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இந்த பணியிடங்களுக்காக பல வருடங்களாக பல பேர் முயற்சி செய்து தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்படி அமையும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அனைவரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
குரூப்-4 தேர்வு முடிவுகள் சம்பந்தமான அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் அப்டேட் செய்யப்பட உள்ளது எனவே தேர்வு சம்பந்தமான தகவலுக்கு எங்களுடன் எப்போதும் இணைந்து இருங்கள் நன்றி.
முக்கிய இணைப்புகள்
TNPSC ரிசல்ட் அதிகாரப்பூர்வ இணையதளம் : Visit Here

 
 
																								