தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 499 புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு! விண்ணப்பிக்க
TNSTC Apprentices Job: அனைவருக்கும் வணக்கம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது புதிய பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிகள் பட்டப் படிப்பு பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான ஏற்ற ஒரு பணியாகும்.
இந்தப் பணியிடங்களைப் பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதனை தெளிவாக படித்து தகுதியான பணி என்றால் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கவும்.
பணி விவரங்கள்
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 499 பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எந்த பணியிடங்களுக்கு பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate (Engineering) Apprentices)
- காலியிடங்களின் எண்ணிக்கை: 201
- Mechanical Engineering / Automobile Engineering – 170
- Civil Engineering – 10
- Computer Science and Engineering / Information Technology – 12
- Electrical and Electronics Engineering – 9
பணி இடங்கள்
இந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியிடங்களுக்கு விழுப்புரம் கோவை சென்னை சேலம் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
இந்த பணியில் உங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல பொறியியல் Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering/ Computer Science and Engineering / Information Technology மற்றும் டிப்ளமோ, B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊக்கத்தொகை
இந்தப் பணியிடம் ஒரு பயிற்சி பணியிடம் என்பதால் இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூபாய் 9000 வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணியிடங்களுக்கு டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு தான் விண்ணப்பிக்க விரும்பும் மண்டலங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய இணைப்புகள்
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 01 அக்டோபர் 2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21 அக்டோபர் 2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply
Useful job
Driver