₹ 56,200 வரை சம்பளம்.. தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகத்தில் 812 பேருக்கு வேலை..
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களாக பணியாற்ற 812 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் ஓட்டுநராகவும், நடத்துனராகவும் ஒருசேர செயல்படவேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்டங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 812 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (SETC, MTC, விழுப்புரம் கோட்டம் நீங்கலாக) ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அரசாணை வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களாக பணியாற்ற 812 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் ஓட்டுநராகவும், நடத்துனராகவும் ஒருசேர செயல்படவேண்டும்.
அதன்படி, கும்பகோணம் கோட்டத்துக்கு 174 பேரும், சேலம் கோட்டத்துக்கு 254 பேரும் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இதே போன்று, கோவை கோட்டத்தில் 60 பேரும், மதுரை கோட்டத்தில் 136 பேரும், நெல்லை கோட்டத்தில் 188 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அரசாணையை கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ளார்
தகுதிகள்:
1. SSLC (தமிழில் நன்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்)
2. கனரக வாகனங்கள் இயக்க உரிய ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் (18 மாதங்கள் முன் அனுபவம் தேவை)
3. நடத்துனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும
கூடுதல் தகுதிகள்:
1. தமிழ்நாட்டில் செல்லுபடியாகும் பப்ளிக் சர்வீஸ் பேட்ஜ்
2. முதலுதவியில் (பேசிக் கோர்ஸ்) சான்றிதழ்
3. 160 செ.மீ குறைவில்லாத உயரம்
4. குறைந்தபட்ச எடை 50 கிமீ
5. நல்ல கண்பார்வை மற்றும் பிற உடல் குறைபாடுகள் இல்லாமல் இருத்தல்
சம்பளம்:
ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை
வயது, படிப்பு, ஓட்டுநர் – நடத்துனர் உரிமங்கள், வேலைவாய்ப்பகத்தில் முன்னுரிமை போன்ற விஷயங்கள் இத்தேர்வில் கணக்கில் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.