தமிழக அரசு தலைமை செயல் அலுவலர் வேலைவாய்ப்பு || விண்ணப்பிக்கும் முறை..
தமிழக அரசின் சமூக நலத் துறையின் கீழ் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் பணிபுரியும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பு வசதிகளுடன் இத்திட்டத்தின் கீழ் விடுதிகள் செயல்படுத்தப்படுகிறது. புதிய விடுதிகளை உருவாக்குவதும், தற்போதுள்ள பணிபுரியும் பெண்கள் விடுதிகளை மேம்படுத்துவது என அனைத்து பிரிவு மகளிரும் பயனடையும் வகையில் செயல்பட்டு வருகிறது.
பணியின் விவரங்கள்
பணியின் பெயர் – தலைமை செயல் அலுவலர் (Chief Executive Officer)
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித்தகுதி
- ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- மேலும் Operations Management / Project Management / Hospitality Industry ஆகிய துறைகளில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- சம்மந்தப்பட்ட துறைகளில் 10 ஆண்டுகள் அனுபவம் தேவை.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்கு பேசத் தெரிந்திருக்க (communication skills) வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது
சம்பள விவரம்
தமிழக அரசு விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு
Chief Executive Officer விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 35 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தமிழக அரசின் பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் உள்ள தலைமை செயல் அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க https://www.tn.gov.in/job_opportunity என்ற இணையதளம் அல்லது https://www.tnwwhcl.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து 5.12.2024-க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வாக இயக்குநர்,
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்,
சமூக நலத்துறை ஆணையர்,
எண்.5 காமராஜர் சாலை,
லேடி வில்லிங்டன் கல்லூரி,
சென்னை 600005.