பெண்களுக்கு ரூபாய் 3 லட்சம் கடன் உதவிதொகை! 1.5 லட்சம் மட்டும் செலுத்தினால் போதும்! சூப்பரான திட்டம்
Udyogini Women Loan Scheme: நம் நாட்டில் மக்களின் முன்னேற்றத்திற்காக பல வகையான திட்டங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்படுகின்றன. குறிப்பாக சுய தொழில் செய்பவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்கு பல்வேறு வகையான கடன் உதவிகள் மானியங்கள் அரசாங்கத்தின் மூலம் எளிய வழியில் கொடுக்கப்பட்டு வருகிறது அதுபோன்ற பெண்களுக்கான ஒரு மானிய திட்டத்தைப் பற்றி நாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பெண்கள் சுயதொழில் திட்டம்:
நம் நாட்டில் உள்ள நிறைய பெண்கள் சுயதொழில் செய்து தம் வாழ்வில் முன்னேற காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு திறன் இருந்தாலும் பொருள் உதவி செய்ய சூழல் இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு நமது அரசாங்கம் ஆனது ஒரு சூப்பரான திட்டத்தை பெண்களுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த மானிய திட்டத்தின் பெயர்தான் உத்தியோகினி யோஜனா திட்டம்.
உத்தியோகினி யோஜனா:
உத்தியோகினி யோஜனா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மூன்று லட்சம் வரை மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது இது குறிப்பாக கிராமத்தில் உள்ள பெண்களுக்கு கவரும் வண்ணம் அமைந்துள்ளது. சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கும் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் அப்ளை செய்து மானியத்துடனான கடன் உதவி பெற்று பயன் பெறலாம். இத்திட்டத்தைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
இரண்டு முறைகள்:
உத்தியோகினி யோஜனா திட்டத்தில் இரண்டு முறைகளில் மானியம் வழங்கப்படுகிறது. அதில் ஒன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. அதாவது 3 லட்சம் ரூபாய் ஒரு பெண் வங்கியில் கடன் பெருகிறார் என்றால் அவருக்கு 50% மானியம் சென்று மீதமுள்ள 1.5 லட்சம் கடன் தொகையை திருப்பி செலுத்தினால் மட்டுமே போதும்.
ஒருவர் பொதுப் பிரிவினராக இருந்தால் மூன்று லட்சம் கடன் பெற்று அவர் 2.1 லட்சம் ரூபாய் மானியம் போக தொகையை திருப்பி செலுத்தினால் போதும். இந்த திட்டத்திற்கு கிராமப்புறத்தில் வாழும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
கடன் தொகையை பெறுவதற்கான வழிமுறைகள்:
உத்தியோகினி யோஜனா மூலம் ஒரு பெண் தொழில் தொடங்க இந்த கடன் உதவியை பெற விரும்பினால் அவர் வங்கிகளுக்கு நேரடியாகவோ சென்று அல்லது ஆன்லைன் மூலமும் விண்ணப்பித்து இந்த கடன் தொகையை பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கடன் தொகையைப் பெற எந்தவித உத்தரவாதமும் தேவை கிடையாது.
உத்தியோகினி திட்டத்தின் மூலம் கடன் பெற தகுதிகள் என்ன?
- இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற விரும்பும் பெண்ணின் வயது 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- கடன் தர விரும்பும் பெண்ணின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளி பெண்களும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் மற்றும் விதவைகளும் இந்த திட்டத்தின் மூலம் கடன் உதவி பெற தகுதியானவர்கள் ஆவர்.
விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்
இந்த திட்டத்தின் மூலம் கடன் உதவிக்கு அப்ளை செய்ய ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ் மற்றும் வங்கி பாஸ்புக் தேவைப்படுகிறது.
உத்தியோகினி யோஜனா திட்டம் பெண்களுக்காக தொடங்கப்பட்ட ஒரு சிறப்பான திட்டமாகும். தொழில் செய்து தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நினைக்கும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்று தொழில் தொடங்கி முன்னேற்றம் காணலாம். மேலே குறிப்பிட்டுள்ள முறையை பயன்படுத்தி நீங்கள் திட்டத்தின் மூலம் மானிய தொகையைப் பெற்று பயன்பெறுங்கள்.
Nice
Good