மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற, மும்பை அணியின் கேப்டன் நாட் ஸ்கிவர் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 44 ரன்களும், வேர்ஹாம் 27 ரன்களும் குவித்தனர். இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. இதில், ஹேலி மேத்யூஸ் 26 ரன்களுக்கு அவுட்டாக, யாஸ்திகா பாட்டியா (31), நாட் ஸ்கிவர் (27) என அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசியாக, அமெலியா கெர் 40* ரன்கள் எடுத்து, 15.1 ஓவரிலேயே (133) இலக்கை அடைந்து மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.