பொதுவாக பெண்களுக்கு நகைகள் என்றாலே ஒரு ஆசை என்று சொல்வார்கள். அதிலும் தங்க நகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு தங்க நகைகள் பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது. காலங்கள் கடந்து செல்ல செல்ல தங்க நகைகள் மீது இருக்கும் ஆசை அதிகமாகி கொண்டுதான் இருக்கே தவிர குறைந்த பாடில்லை. இதனால் தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.
அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனே காணப்பட்டு வந்தது. ஆனால் இன்று(ஜூன் 23) தங்கம் விலை சற்று குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி, ஒரு சவரன் ரூ.43,880 க்கு விற்பனையாகிறது. அதேபோல் கிராம் ஒன்று ரூ.5,485 க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 குறைந்து ஒரு சவரன் ரூ.43,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் தங்கம் கிராமுக்கு 40 குறைக்கப்பட்டு ஒரு கிராம் ரூ.5,445 க்கு விற்பனை செய்யபப்டுகிறது.