தமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

free-sewing-machine-scheme

free-sewing-machine-scheme

தமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் பெண் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பதற்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தையல் இயந்திரம்: free-sewing-machine-scheme

தமிழக அரசு பெண்களை பாதுகாக்கும் வகையிலும், தொழில் துறையில் அவர்கள் வளர்ச்சி அடைய ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சமூக நலத்துறை வாயிலாக சத்தியவாணி அம்மையார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொழில் புரிய ஆர்வம் உள்ள பெண்களுக்கு தக்க பயனாக இருந்து வருகிறது.

மேலும் இந்த இலவச தையல் இயந்திரம் பெற ஏழை பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தகுதியானவர்கள். மேலும் அவர்களது ஒரு மாத வருமானம் ரூ.12 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதனை விண்ணப்பிப்பதற்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: free-sewing-machine-scheme

  • வயது சான்றிதழ்
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  • வருமான சான்றிதழ்
  • ஆதார் அட்டை
  • சாதி சான்றிதழ்
  • இருப்பிட சான்றிதழ்
  • தையல் பயிற்சி சான்றிதழ்
  • உடல் ஊனமுற்றோர் சான்றிதழ் அல்லது கணவனால் கைவிடப்பட்டோர் அல்லது உதவி சான்றிதழ்

மேல் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்கள் மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறைக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தினை https://cms.tn.gov.in/sites/default/files/forms/social_welfare_form8.pdf என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

free-sewing-machine-scheme English form – click here

free-sewing-machine-scheme Tamil Fom –  Click here

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *