TNPSC Group 2 Cut-Off Analysis 2025: இன்று நடந்த குரூப் 2 முதல்நிலைத் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான தேர்வர்களுக்காக, வினாத்தாள் எப்படி இருந்தது, எந்தப் பகுதிகள் கடினமாக இருந்தன, தோராயமாக கட்-ஆஃப் எவ்வளவு இருக்கலாம் என்பது குறித்த முழுமையான அலசலை இங்கே எளிமையாகப் பார்க்கலாம்.

வினாத்தாள் கடினமா? எளிமையா?
தேர்வு எழுதிய பலரின் கருத்துப்படி, இந்த ஆண்டு வினாத்தாள் சராசரியாக, சற்றே கடினமானதாக இருந்துள்ளது. அதாவது, சில பகுதிகள் எளிதாகவும், சில பகுதிகள் மிகவும் கடினமாகவும் கேட்கப்பட்டிருந்தன.
1. பொதுத்தமிழ் – மதிப்பெண்களை அள்ளிக் கொடுத்த பகுதி!
- பொதுத்தமிழ் பகுதி பெரும்பாலும் எளிமையாகவே இருந்தது.
- பள்ளிப் பாடப்புத்தகங்களை நன்கு படித்தவர்கள், அதிகக் கேள்விகளுக்குச் சுலபமாகப் பதிலளித்திருக்க முடியும்.
- இலக்கண வினாக்கள் மட்டும் சற்று யோசித்து பதிலளிக்கும்படி இருந்ததாகத் தேர்வர்கள் கூறினர்.
2. பொது அறிவு – தேர்வின் முடிவை நிர்ணயிக்கும் பகுதி!
- இந்தப் பகுதிதான் பலருக்கும் சற்று கடினமாக இருந்துள்ளது.
- குறிப்பாக, அறிவியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த கேள்விகள் ஆழமாகக் கேட்கப்பட்டிருந்தன.
- வரலாறு, இந்திய அரசியல் போன்ற பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாகவே இருந்தன.
- நடப்பு நிகழ்வுகள் பகுதியில், எதிர்பார்க்காத சில கேள்விகள் வந்ததாகப் பலரும் தெரிவித்தனர்.
3. கணிதம் – பயிற்சி எடுத்தவர்களுக்கு எளிமை!
- கணிதப் பகுதி எளிதாகவே இருந்தது.
- முறையாகப் பயிற்சி செய்தவர்கள், பெரும்பாலான கேள்விகளுக்குச் சரியாக விடையளித்திருக்க முடியும். முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் வடிவத்தில்தான் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் எவ்வளவு?
வினாத்தாள் சற்றே கடினமாக இருந்ததால், கடந்த முறையை விட இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
தேர்வர்களின் கருத்துகள் மற்றும் நிபுணர்களின் கணிப்பின்படி, தோராயமாக 135 கேள்விகளுக்கு மேல் சரியாகப் பதிலளித்திருக்கும் பொதுப்பிரிவு தேர்வர்கள், அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்குத் தகுதிபெற நல்ல வாய்ப்பு உள்ளது. மற்ற பிரிவினருக்கு இதைவிடச் சில மதிப்பெண்கள் குறைவாக இருக்கலாம்.
முக்கிய குறிப்பு: இது ஒரு உத்தேச கணிப்பு மட்டுமே. தேர்வாணையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பே இறுதியானது.
காலிப்பணியிடங்கள் அதிகரிக்குமா?
தேர்வர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, காலிப்பணியிடங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், “எப்போதுமே, இறுதி முடிவு வெளியிடுகிற வரைக்கும், கவுன்சிலிங் நடக்கிற வரைக்கும் பணியிடங்களை அதிகரித்துக்கொண்டே போகலாம். அதே மாதிரி குரூப் 4 தேர்விலும் அதிகரித்தோம். அதே மாதிரி குரூப் 2-விலும் அதிகரிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
மேலும், “ஒரு பணியிடம்கூட வீணாகாமல், தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் எல்லா துறைகளிடமும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
தேர்வு எழுதியவர்கள், உத்தேச விடைக்குறிப்பைக் கொண்டு உங்கள் மதிப்பெண்களைச் சரிபாருங்கள். தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நீங்கள் கருதினால், கொஞ்சமும் தாமதிக்காமல் அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு (Mains Exam) படிக்கத் தொடங்குங்கள். முடிவுகள் வரும் வரை காத்திருப்பது, உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கும்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Download GT Answer Link:
Download English Answer Link:
Download GS Answer Link:
Download Maths Answer Link: