தமிழகத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து காவல்த்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது இரு சக்கர வாகனங்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது.
முன்னதாக இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமே ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனற திட்டம் தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது புதிதாக அமலுக்கு வரும் திட்டத்தில், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது ஜூன் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற திட்டம் முதலில் பெங்களூர் போன்ற நகரங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது தமிழகத்திலும் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளதாகவும் காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.