ட்விட்டர் செயலியில் புதிய மாற்றம்.. எலன் மாஸ்க் அறிவிப்பு – அதிருப்தியில் பயனர்கள்!

elon-musk-announced-a-new-change-to-the-twitter-app-update-on-aug-19-2023

மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியான ட்விட்டரில் புதிய மாற்றம் ஒன்றை செய்ய இருப்பதாக எலன் மாஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் செயலி

சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அதிகம் பயன்படுத்தும் செயலியாக ட்விட்டர் இருக்கிறது. இந்நிலையில் உலகில் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மாஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல மாற்றங்களை அறிவித்து வருகிறார்.

குறிப்பாக ப்ளூ டிக் வைத்து கொள்ள மாதம் சந்தா கட்டாயம் செலுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செலுத்தாமல் இருந்ததால் முக்கிய பிரபலங்களின் ப்ளூ டிக் அகற்றப்பட்டது. அது பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதன் பின் ட்விட்டர் லோகோ மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது ட்விட்டர் தளத்தில் பயனர்களின் கணக்குகளை பிளாக் செய்யும் வசதியை விரைவில் நீக்க இருப்பதாக எலன் மாஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய மாற்றம் நடைமுறைக்கு வந்தால் இனி பயனர்கள், தங்களுக்கு தொந்தரவு தரக்கூடிய கணக்குகளை பிளாக் செய்ய முடியாது. அவர்களிடம் இருந்து வரும் குறுஞ்செயலிகளை மட்டுமே மியூட் செய்ய முடியும். இந்த அறிவிப்பு பயனர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *