குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வர்களே… சற்றுமுன் TNPSC அறிவித்த புதிய அறிவிப்பு உங்களுக்குத்தான்..! உடனே பாருங்க…

தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் பதவிகளுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2 என பல்வேறு குரூப்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

happy news for Group 1 and Group 4 Candidates TNPSC new notification is for you Watch now

அந்த வகையில், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று கிராம நிர்வாக அலுவலர் (VAO), தட்டச்சர், ஸ்டேனோ டைபிஸ்ட், இளங்கலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தற்பொழுது குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 32 பணியிடங்களுக்கான குரூப்1 முதல்நிலை தேர்வானது நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்திலும், எழுத்து தேர்வானது அடுத்த ஆண்டு ஜூலையிலும் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற நவம்பர் மாதத்திலும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இதற்கான எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *