50,000 பேருக்கு அரசு வேலை முதல்வர் அதிரடி அறிவிப்பு!!.. Government Job Announcement for 50 Thousand People
50,000 பேருக்கு அரசு வேலை முதல்வர் அதிரடி அறிவிப்பு!!..
Government Job Announcement for 50 Thousand People
Government Job Announcement for 50 Thousand People 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை முதல்வர் அதிரடி அறிவிப்பு .தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் நபருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் இன்று அவர் 1598 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். சென்னை கலைவாணர் அரங்கில் மக்களுடன் முதல்வர் திட்டப்பயணையாளருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.
50,000 பேருக்கு அரசு வேலை
அத்துடன் 1598 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கக்கூடிய திட்டங்களை நாங்கள் தீட்டி இருக்கிறோம் .
அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மகளிர் காண விடியல் பயணம் புதுமைப்பெண் திட்டம் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கலைஞர் மகளை உரிமை திட்டம் இல்லம் தேடி கல்வி மக்களை தேடி மருத்துவம் ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் நான் முதல்வன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் முதல்வரின் முகவரி கள ஆய்வில் முதலமைச்சர் இப்படி நான் சொல்லிக் கொண்டே போக முடியும் .
இத்திட்டங்கள் எல்லாம் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்து கொண்டிருக்கும் திட்டங்களாக அமைந்திருக்கின்றது .எந்த வரிசையில் எந்த திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் மக்களுடன் முதல்வர் என்கின்ற இந்த மகத்தான திட்டம் இத்திட்ட பயனாளிகளுக்கு அரசு சேவைகளை வழங்குகிற இனிய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் மக்களிடம் செல்ல மக்களோடு வாழ் மக்களுக்காக வாழ் என்பதுதான் எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும் தமிழினத் தலைவர் கலைஞரும் காட்டிய பாதை என்பதை நாங்கள் மறந்து விட மாட்டோம்.
ஆட்சியில் இல்லாத போது மக்களுக்காக போராடுவோம் வாதாடுவோம் ஆட்சியில் இருக்கின்ற நேரத்தில் மக்களுக்காக திட்டங்களை தீட்டுவோம். நன்மைகளை வழங்கிக் கொண்டே இருப்போம். அத்தகைய நன்மைகளை நேரடியாக ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்குகின்ற மாபெரும் திட்டம் தான் மக்களுடன் முதல்வர் என்கின்ற இந்த திட்டம்.
அரசு திட்டங்களில் பயன்கள் கடைக்கோடி மனிதருக்கும் போய் சேர்கிறதா என்று ஆய்வு செய்கின்ற நேரத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி நான் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றேன் நான் மட்டுமல்ல பல அமைச்சர்களும் சென்றார்கள். அப்போது அரசின் சேவைகளை விரைவாக பெறுவதில் சில மாவட்டங்களில் சுனக்கம் இருந்தது எங்களுக்கு தெரிந்தது. மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் இருந்தார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம் .
அதை முழுமையாக போக வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு உதவக்கூடிய வகையில்தான் ஒரு புதிய திட்டமாக மக்களுடன் முதல்வர் என்கின்ற தீட்டப்பட்டது 18 12 2023 அன்று கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். அரசு அலுவலகங்கள் மக்கள் சென்று சேவைகளைப் பெறும் அந்த நிலையை மாற்றி அரசின் சேவைகளை மக்களுடன் நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க எல்லா பொது மக்களுக்கும் அதை எளிதில் கிடைக்க செய்வதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது .
சேவைகளைப் பெற அலைய தேவையில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கினோம் விண்ணப்பித்தால் விரைவாக தீர்வு கிடைக்க ஏற்பாடுகளை செய்தும் தேவையற்ற தாமதங்களை தவிர்த்தோம் .அவசியம் இல்லாத கேள்விகளை குறைத்தும் இதனால் தான் சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் பெற முடிகின்றது என்று என்றைக்கு மக்கள் மனதார பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் போன்றவர்களுக்கான சேவைகளை முதலிலேயே கண்டறிந்து தீர்வு வைப்பதில் இத்திட்டம் வெற்றி பெற்று இருக்கிறது. இத்திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கின்றது.
முதற்கட்டமாக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் நகர்ப்புறங்கள் ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகள் 2058 முகாம்கள் நடத்தப்பட்டு இரண்டாம் கட்டமாக எல்லா மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய ஊராட்சிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கின்றது பெறப்பட்ட மனுக்களை முதலில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள் .
அதன் பிறகு தொடர்புடைய துறைக்கு அனுப்புகிறார்கள் 30 நாளில் இந்த நடவடிக்கைகள் மூலமாக நான் பெருமையோடு சொல்கிறேன் 3 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது .எது மிகப்பெரிய எண்ணிக்கை இது தொடர்பாக மேலும் சில புள்ளி விவரங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வருவாய்த்துறையில் 42962 பட்டா மாறுதலும் 18,236 நபர்களுக்கு பல்வேறு வகையான சான்றுகளும் தரப்பட்டு இருக்கிறது. மின்சார வாரியத்தில் 26 ஆயிரத்து 353 நபர்களுக்கு புதிய மின் இணைப்புகள் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றது .நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக 37,75 நபர்களுக்கு வரிவிதிப்பு குடிநீர் கழிவு நீர் இணைப்பு கட்டட அனுமதி பிறப்பு இறப்பு பதிவுகள் போன்றவை செய்து தரப்பட்டு இருக்கிறது.
குரு சிறு நடுத்தர துறை மூலம் 1390 நபர்களுக்கு 60 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் தொழில் கடன்கள் உதவி செய்து தரப்பட்டு இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 கோடி ரூபாய் மதிப்பில் 3659 நபர்களுக்கு மூன்று சக்கர வாகனம் கடன் உதவிகள் கருவிகள் அடையாள அட்டைகள் தரப்பட்டுள்ளது .
கூட்டுறவு துறை மூலம் 6 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பில் 76 நபர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டிருக்கிறது .இப்படியே 30 நாட்களில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது என்பதை நான் பெருமையோடு இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
இதைவிட பெரிய வெற்றி இருக்க முடியுமா இதனை இத்தனை லட்சம் குடும்பங்கள் இதனால் பயனடைந்து இருக்கிறார்கள் எல்லா மாவட்டங்களிலும் மேற்படி முகாம்களில் அளித்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு அந்த பயனாளிகளுக்கு அவ்வப்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது .இவற்றுக்கும் எல்லா மாவட்டங்களில் நடைபெற்று வரும் இந்த நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகள் காணொளி வாயிலாக நானும் பங்கேற்று இருக்கிறேன் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோரிக்கைகள் சிறப்பு முகாம்கள் மூலம் முடிவுற்றதை பத்திரிக்கை செய்து ஊடகங்கள் பாராட்டு இருக்கின்றது .
மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுக்களும் முடிவு காண்பதே முக்கிய என்று நினைக்காமல் விடிவு காண்பதே நோக்கம் என்ற செயல்பட்டால் தான் அரசு மேல் ஏழை வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை வலுவடையும் அத்தகைய நம்பிக்கையை விதைக்கின்ற திட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் அமைந்திருக்கின்றது .இதற்கு காரணமாக அமைச்சர்கள் அனைத்து அரசு அதிகாரிகளையும் நான் நன்றி உணர்வோடு பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் இந்த நிகழ்ச்சியில் மற்றவர்கள் சிறப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்க இருக்கிறோம்.
கழக ஆட்சிக்கு வந்த முதலே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருகிறோம். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றது .இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றது .தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உட்பட்ட பல்வேறு அரசு தேர்வாணைய முகாம்கள் மூலம் 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் .அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 50,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பத்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அதன் ஒரு பகுதியாக தான் இன்றைக்கு 1598 பணியிடங்களுக்கு தேர்வானோகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றது பணி நியமனம் பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பணி நியமன ஆணைகளை பெற்ற இளைஞர்கள் உங்களை நாடிவரும் பொது மக்களுக்கு அரசின் சட்ட வரமிகளுக்கு உட்பட்டு அவர்களின் குறைகளைக் களைய முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சரவர்கள் கூறியுள்ளார்கள்.