பொதுவாக தமிழக பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டின் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காலாண்டு தேர்வுக்கான அட்டவணையும் தேர்வு முடிந்தப்பின் விடப்படும் விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வானது 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த காலாண்டு தேர்வு முடிந்தப்பின் 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக தமிழக பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டின் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காலாண்டு தேர்வுக்கான அட்டவணையும் தேர்வு முடிந்தப்பின் விடப்படும் விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

happy news Are there so many days off for schools in September Students in celebration read now

நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வானது 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இந்த காலாண்டு தேர்வு முடிந்தப்பின் 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *