செப்., 7 சந்திர கிரகணம்; எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? எந்த ராசிக்கு துரதிர்ஷ்டம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Lunar
தனி ஒரு நபரின் ஜாதகத்தில் குடும்ப உறவுகள், மன அமைதிக்கான வழிகள், நற்பெயர் மற்றும் பிற உணர்வுப்பூர்வமான விஷயங்களை பிரதிபலிக்கும் ஒரு கிரகமாக சந்திரன் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் வரும் செப்டம்பர் 7 அன்று நிகழும் சந்திர கிரகணம், அனைத்து ராசியினருக்கும் தனித்துவமான பலன்களை கொண்டு வரும், அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை கொண்டு வரும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேஷம் – நிதி நிலை மேம்படும்!

மேஷம் - நிதி நிலை மேம்படும்!

எதிர்வரும் சந்திர கிரகணம் மேஷ ராசியினரின் ஜாதகத்தில் 11-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இந்த மாற்றம் ஆனது, உங்கள் நிதி நிலையில் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வரும். அதாவது, வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும், உங்கள் விருப்பங்கள் நிறைவேறும், ஆசைகள் நிறைவேறும். உங்கள் ஆசைகளை நிறைவேற்ற நிதி ஒரு தடையாக இருக்காது. புது மனை, வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் காணப்படுகிறது!

ரிஷபம் – பதவி உயர்வு கிடைக்கும்!

ரிஷபம் - பதவி உயர்வு கிடைக்கும்!

ரிஷப ராசியினருக்கு பணியிடத்தில் சாதகமான ஒரு சூழ்நிலையை இந்த கிரகணம் கொண்டு வருகிறது. உங்கள் படைப்பாற்றல் மேம்படும், உங்கள் தனித்திறன்கள் வெளிப்படும். உங்கள் திறமைகளை கண்டு உயர் அதிகாரிகள் மெச்சுவார்கள், உயர் பதவிக்காக பரிந்துரைப்பார்கள். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும், உங்கள் கடமைகளை சிறப்பாக செய்ய பதவி உயர்வு, ஊதிய உயர்வும் கிடைக்கும்.

மிதுனம் – அரசு வேலை கிடைக்கும்!

மிதுனம் - அரசு வேலை கிடைக்கும்!

மிதுன ராசியினருக்கு அரசு பணிகளை கொண்டு வரும் காலமாக இந்த கிரகணம் இருக்கும். ஆம், அரசு சார்ந்த ஒப்பந்தங்கள் மற்றும் பணிகளை இந்த சந்திர கிரகணம் கொண்டு வருகிறது. தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட தடைகள் விலகிச் செல்லும், புதிய பணிகளை தொடங்கும் வாய்ப்பும் கிடைக்கும். கல்வி, கற்பித்தல் துறையில் இருக்கும் நபர்கள் தங்கள் துறையில் உயர் பதிவிகளை அடைவார்கள், நற்பெயரை சம்பாதிப்பார்கள்.

கடகம் – கெட்ட செய்தி ஒன்று காத்திருக்கிறது!

கடகம் - கெட்ட செய்தி ஒன்று காத்திருக்கிறது!

எதிர்வரும் சந்திர கிகரகணமானது, கடக ராசியினரின் ஜாதகத்தில் 8-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறார். இந்த மாற்றம் ஆனது, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகளை கொண்டு வரும். கெட்ட செய்தி ஒன்றையும் கொண்டு வரும்.

ஆய்வு சார்ந்த துறையில் இருக்கும் நபர்கள், அறிவியலாளர்கள் தங்கள் துறையில் சில பிரச்சனைகளையும், சவால்களையும் சந்திக்க நேரிடும். பதற்றத்துக்கு பஞ்சம் இல்லாமல் உங்கள் வாழ்க்கை செல்லும். எச்சரிக்கையாக இருங்கள்!

சிம்மம் – தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்!

சிம்மம் - தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்!

சிம்ம ராசியினருக்கு இந்த சந்திர கிரகணம், வழக்கமான தினத்தை அளிக்கும். அதே நேரம் போட்டி தேர்வு, திறனாய்வு தேர்வு, விளையாட்டு போட்டிகள் போன்றவற்றில் எதிர்பார்த்த வெற்றிகளை பெற்று தரும். அதாவது, போட்டிகள் நிறைந்த விஷயத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறும் ஒரு காலமாக இது அமையும். தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட போட்டிகள் குறையும், துறையின் தலைவர்களாக வளர்ந்து நிற்கும் வாய்ப்பும் இன்று காணப்படுகிறது.

கன்னி – தொழில் வாழ்க்கையில் வெற்றி!

கன்னி - தொழில் வாழ்க்கையில் வெற்றி!

எதிர்வரும் சந்திர கிரகணமானது, கன்னி ராசியினரின் ஜாதகத்தில் 6-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இந்த மாற்றம் ஆனது, தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த வெற்றிகளை கொண்டு வரும், நீண்ட நாட்களாக காணப்பட்ட பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும், புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளையும் கொண்டு வரும் வரும். சட்டம் சார்ந்த விஷயங்கள், குறிப்பாக, பூர்வீக சொத்து சார்ந்த வழக்குகளில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும், வாழ்க்கை சிறப்பாக மாறும்.

துலாம் – வருமானம் அதிகரிக்கும்!

துலாம் - வருமானம் அதிகரிக்கும்!

துலாம் ராசியினரின் கடுமையான உழைப்புக்கு பலன் அளிக்கும் ஒரு காலமாக இந்த சந்திர கிரகணம் பார்க்கப்படுகிறது. அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கான நற்பலன்களை கொண்டு வரும்.

இருப்பினும், இந்த பலனை பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உறவில் காணப்பட்ட இடைவெளிகளை குறைக்கும் வாய்ப்பு கிடைக்கும், கடந்த கால பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள், எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

விருச்சிகம் – புது வாகனம் வாங்குவீர்கள்!

விருச்சிகம் - புது வாகனம் வாங்குவீர்கள்!

விருச்சிக ராசியினருக்கு புதிய சொத்துக்களை குவிக்கும் ஒரு காலமாக இது இருக்கும். வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்களையும், வாகனம் உள்ளிட்ட பயன்பாட்டு பொருட்கள் போன்ற அசையும் சொத்துக்களையும் வாங்கி குவிப்பீர்கள்.

உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவு குடும்ப வாழ்க்கையோடு நிற்காமல், தொழில் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். உங்கள் விருப்பம் போல் வாழ்க்கை சிறப்பாக மாறும். வீட்டில் உள்ள பெரியவர்களின் (உங்கள் பெற்றோரின்) ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.

தனுசு – புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்!

தனுசு - புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்!

தனுசு ராசியினருக்கு புதிய தொழில் ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளை கொண்டு வரும் ஒரு காலமாக இது காணப்படுகிறது. எதிர் வரும் சந்திர கிரகணத்தின் பலனாய், அரசு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

பணியிடத்தில் காணப்பட்ட பிரச்சனைகள் குறையும், உங்கள் எதிர்பார்ப்புகள் படிப்படியாக நிறைவேறும். வாழ்க்கை உங்களுக்கு பிடித்த வகையில் மாறும், பணியிடத்தில் உங்களுக்கான ஒரு தனி அடையாளம் கிடைக்கும்!

மகரம் – செலவுகள் அதிகரிக்கும்!

மகரம் - செலவுகள் அதிகரிக்கும்!

​மகர ராசியினரின் நிதி நிலயை மோசமாக்கும் ஒரு கிரக நிலை மாற்றமாக இந்த சந்திர கிரகணம் பார்க்கப்படுகிறது. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும், உங்கள் சேமிப்புகளை பெருமளவில் பாதிக்கும். ஆரோக்கியம் சார்ந்த பல பிரச்சனைகளை கொண்டு வரும். குடும்ப உறவுகளின் செயல்பாடுகள் உங்களை மனதளவில் காயப்படுத்தும்.

கண், பற்கள் தொடர்பான ஆரோக்கிய பிரச்சனைகள் உங்கள் இரவு உறக்கத்தை பாதிக்கும், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டுவது கூடாது. முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்!

கும்பம் – மன அழுத்தம் காணப்படும்!

கும்பம் - மன அழுத்தம் காணப்படும்!

கும்ப ராசியில் நிகழும் இந்த சந்திர கிரகணம், கும்ப ராசியினரின் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. வாழ்க்கையில் பதற்றத்தை அதிகரிக்கிறது, மன அழுத்தம் வேண்டி ஆன்மீக பயணங்களை நீங்கள் மேற்கெள்வீர்கள். குறித்த இந்த காலத்தில் அவசர முடிவுகள் ஏதும் கூடாது, உங்கள் வாழ்க்கை சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பதும் கூடாது. யாரையும் நம்பி உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். ரகசியங்கள் காப்பதன் அவசியம் என்ன என்பதை புரிந்துக்கொள்வீர்கள்!

மீனம் – மண வாழ்க்கையில் மகிழ்ச்சி!

மீனம் - மண வாழ்க்கையில் மகிழ்ச்சி!

மீன ராசியினருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி கொண்டு வரும் ஒரு தினமாக இன்று இருக்கும். கணவன் – மனைவி இடையே காணப்பட்ட மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும், உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும். சிறு குழந்தைகளின் பெற்றோராக இருக்கும் தம்பதியினர், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவு எடுக்கும் ஒரு காலமாக இருக்கும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *