கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்காக பிரத்யேக ATM அட்டை – தமிழக முதல்வர் இன்று இறுதி கட்ட ஆலோசனை!
தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்க உள்ள கலைஞர் உரிமை திட்டத்திற்கான இறுதி கட்ட ஆலோசனைகளை இன்று முதல்வர் அதிகாரிகளுடன் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கலைஞர் உரிமைத்தொகை:
தமிழகத்தில் ரேஷன் அட்டைகளின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் முதல் வழங்கப்பட்டு அனைத்துவித பணிகளும் தற்போது இறுதி அடைந்துள்ளன. இந்நிலையில் செப்டம்பர் 15ம் தேதியான பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தன்று காஞ்சிபுரத்தில் இத்திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
மொத்தம் ஒரு கோடி 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் அரசு தரப்பு தகவலுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகளின் மூலம் பிரத்தியேகமான ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து இன்று தமிழக முதல்வர் முக்கிய அதிகாரிகளுடன் இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட உள்ளார். மேலும் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.