சந்திராயன் 3 விண்கலம் இஸ்ரோ வெளியிட்ட அடுத்த அப்டேட்..!

Next update released by ISRO Chandrayaan 3 spacecraft dont miss and read it now

கடந்த 14 ஆம் தேதி இஸ்ரோவால் சந்திராயன் 3 என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலம் 2 வது புவிவட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக முடிந்தது என்று நேற்று முன்தினம் இஸ்ரோ தெரிவித்தது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில், இஸ்ரோவில் இருந்து சந்திரயான் 3 விண்கலத்தினை 3 வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல், 4 வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வருகிற 20 ஆம் தேதி பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் நடைபெறும் என தெரிவித்து உள்ளது.

பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோ மீட்டர் உயரத்தில் புவியின் நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 நிலை நிறுத்தப்பட்டதது. பூமிக்கும் நிலவிற்கும் இடையே சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில், 2 வது சுற்றுப்பயணத்தை உயர்த்தியபின் விண்கலம் 41,603 கி.மீ. x 226 கி.மீ. உயரத்தில் உள்ளதாக விஞ்ஞாணிகள் தெரிவிக்கின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *