தமிழக பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை..! உடனே விண்ணப்பியுங்கள்… சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

தமிழக அரசு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழக்கும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Rs 1000 per month scholarship for Tamilnadu school students Apply Now New read it

அதன்படி, நடப்பு ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “திறனாய்வு தேர்வு” தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் கலந்துகொண்டு முதல் 1000 மதிப்பெண்களை பெறும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஆண்டுதோறும் ரூ.10,000 வரை உதவித்தொகை, அவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை 2ஆம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத ஆர்வமுள்ள 11ஆம் வகுப்பு மாணவர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *