என்னது ரேஷன் கார்டு ரத்து பண்றாங்களா? உங்க குடும்பத்துக்கும் ரேஷன் கார்டு இருக்கா..? உடனே இத பண்ணிடுங்க!

ரேஷன் அட்டை என்பது பொருட்கள் வாங்க பயன்படுவது மட்டுமல்ல… நம்முடைய அடையாளமாகவும் திகழ்கிறது! அரசின் அனைத்து வகையான நலதிட்ட உதவிகளும் இந்த ரேஷன் கார்டு மூலமாகத்தான் மக்களை சென்றடைகிறது. ரேஷன் கார்டு என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்றியமையாத ஒன்றாக திகழ்ந்து வருகிறது. திருமணம் ஆனவுடன் புதுமண தம்பதிகள் உடனே செய்வது தங்களுக்கு ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது தான்! அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தான் இந்த ரேஷன் கார்டு! இதற்க்கும் சில விதிமுறைகள் உள்ளன. சற்று முன் வந்த புதிய செய்தியை பாக்கலாம்.

கடந்த சில நாட்களாகவே ரேஷன் அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. எதற்காக ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உண்மை காரணம் தற்போது வெளிவந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் போலியான முகவரியுடன் ரேஷன் பொருட்களை பெற்று வந்திருக்கிறார்கள். போலியான ரேஷன் கார்டுகளை ரத்து செய்யவே… ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி கொண்டு இருக்கின்றன. இப்படியான ரத்து முறை நாடு முழுவதும் விரிவு செய்யப்பட உள்ளது.

shocking-news-for-civilians-can-you-cancel-my-ration-card-does-your-family-also-have-a-ration-card-do-it-now-dont-skip-this-news

shocking-news-for-civilians-can-you-cancel-my-ration-card-does-your-family-also-have-a-ration-card-do-it-now-dont-skip-this-news

யாரெல்லாம் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காம வச்சிருக்கீங்களோ… உடனே இணைச்சிடுங்க…

உங்கள் ரேஷன் கார்டு… உங்கள் உரிமை..

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *