15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் “சுப்ரமணியபுரம்” படம் ரீ ரிலீஸ்..! மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!!

கடத்த 2008 ஆம் ஆண்டு “சுப்பிரமணிபுரம்” என்ற படம் வெளியானது. இந்த படத்தில் இயக்குனரும், நடிகருமான சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில்சசிக்குமார் மட்டுமல்லாமல் நடிகர் ஜெய், சமுத்திரக்கனி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

Subramaniapuram movie rerelease after 15 years The film crew celebrated by cutting the cake read it

“சுப்ரமணியபுரம்” படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம் பிடித்த ஆடுங்கடா மச்சா, கண்கள் இரண்டா, மதுர குலுங்க குலுங்க ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் “சுப்ரமணியபுரம்” படம் ரீ ரிலிஸ் செய்யப்பட்டது. சென்னை வடபழனி கமலா திரையரங்கில் இன்று காலை திரையிடப்பட்ட ‘சுப்ரமணியபுரம்’ படத்தை பார்ப்பதற்கு சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர் ஜெய் ஆகியோர் வந்தனர். அதன்பின்னர் படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *