நடப்பு ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு போட்டியாக இந்தியா – பாகிஸ்தான் போட்டி இருக்கும். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அன்றைய தினம் நவராத்திரி என்பதால் அன்றைய தேதியில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காரணத்தை கருத்தில் கொண்டு தேதியை மாற்ற கோரி பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதன் பெயரில் அக்டோபர் 14 ஆம் தேதிக்கு போட்டியை மாற்ற கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையே அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற இருந்த போட்டி, இரண்டு நாட்களுக்கு முன்னதாக அக்டோபர் 10 ஆம் தேதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற்வுள்ள நியூசிலாந்து – வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் போட்டிகள் ஒரு நாளைக்கு முன்னதாக நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.