கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 225 மாணவர்களுக்கு சான்றிதழ்களும், மடிக்கணினிகளும் முதலமைச்சர் வழங்கினார். இந்த மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியது:-
நம்முடைய தமிழகத்தில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைத்து உயர் கல்விக்கு செல்ல வேண்டும். எட்டாக்கனியாக இருந்த கல்வியானது… இன்று எல்லாருக்கும் கிடைத்துள்ளது. IIT-யில் படிக்க இந்த வருடம் ஆறு மாணவர்கள் சென்றுள்ளனர். எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் கிடைக்க வேண்டும்.
கடந்த ஆண்டில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 75 பேர் சென்றனர். ஆனால் இந்த ஆண்டில் 225 மாணவர்கள் செல்கிறார்கள். கவர்மெண்ட் ஸ்கூலில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது உலகிற்கே தெரிந்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் செல்லும் போது தான் சமூகநீதி முழுமையடைகிறது. எல்லாருக்குமே எல்லாம் கிடைக்கணும்… அது கல்வியிலும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு என்று அவர் கூறினார்.
தனியார் ஸ்கூல்ல படிச்சா தான் பெரிய படிப்புகளை எல்லாம் படிக்க முடியும்னு இல்லைங்க… கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சாலும் பெரிய பெரிய சாதனைகளை பண்ண முடியும்… உங்க பிள்ளைகளுக்கு அறிவும், திறமையும் இருந்தா மட்டும் போதும்… எந்த துறையிலும் சாதிக்கலாம்… சந்தோசமா உங்க பிள்ளைகளா அரசு பள்ளியில படிக்க வைங்க..!