தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு – செப். 15 முதல் தேர்வு தொடக்கம்!

tamilnadu-school-quarterly-exam-time-table-2023-download

tamilnadu-school-quarterly-exam-time-table-2023-download

தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு – செப். 15 முதல் தேர்வு தொடக்கம்!

தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு – செப். 15 முதல் தேர்வு தொடக்கம்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வு நடைபெற இருக்கிறது. அந்த வகையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தேர்வு தொடங்குகிறது.

காலாண்டு தேர்வு

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் பொது வினாத்தாள் முறையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என கல்வித்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தற்போது காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது. அதில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு வருகிற 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

 

அதே போல 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 முதல் பிற்பகல் 12.45 மணி வரை தேர்வு நடைபெறும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்வு நடக்கும். 6,7,8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், 9,10 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்வு நடைபெறும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *