தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் 760 பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளது.
பொதுப்பணித் துறையில் வெளியாகி உள்ள பணிக்கு கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை ஆகிய அனைத்தும் முழுமையாக இக்கட்டூரையில் பார்க்கலாம்.
நிறுவன குறிப்பு
தமிழ்நாடு பொதுப்பணித் துறை, தமிழக அரசின்கீழ் இயங்கும் துறையாகும். இது பொதுப்பணித் துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அரசுத் துறை கட்டுமானங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பெரும்பாலான கட்டிடங்கள் பராமரிப்பு, பாலங்கள், சாலைகள், மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானங்களை நிர்வகிக்கிறது.
1. பணியின் பெயர்: Graduate Apprentice
- காலியிடங்களின் எண்ணிக்கை: 500 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவித்து உள்ளது
- கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் உள்ள கல்வி நிலையத்தில் பொறியியல் பிரிவில் டிகிரி (Regular – Full time) முடித்து இருக்க வேண்டும்,
- சம்பளம்: மாதம் சம்பளமாக Rs.9,000 வரை வழங்கப்படும்.
2. பணியின் பெயர்: Technician (Diploma) Apprentice
- காலியிடங்களின் எண்ணிக்கை: 160 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவித்து உள்ளது
- கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் உள்ள கல்வி நிலையத்தில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும் (Regular – Full time)
- சம்பளம்: மாதம் சம்பளமாக Rs.8,000 வரை வழங்கப்படும்.
3. பணியின் பெயர்: Non-Engineering Graduate Apprentice
- காலியிடங்களின் எண்ணிக்கை: 100 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவித்து உள்ளது
- கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் உள்ள கல்வி நிலையத்தில் டிகிரி Arts / Science / Commerce / Humanities such as BA/B.Sc., / B.Com / BBA / BBM / BCA (Regular – Full time) ஆகிய பிரிவில் முடித்து இருக்க வேண்டும்.
- சம்பளம்: மாதம் சம்பளமாக Rs.9,000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: தமிழக அரசு விதிமுறைப்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிகளுக்கு Shortlisting (Based on Marks), Certificate Verification ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை:
பொதுப்பணித் துறை பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் http://boat-srp.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் 31.12.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.