தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் கீழ், மாநிலம் முழுவதும நீண்ட தூரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த துறைகளில் காலியாக உள்ள ஓட்டுனர், நடத்துனர் மற்றும் கம்மியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களை நிரப்ப ஒய்வு பெற்ற பணியாளர்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்து அதன்பின் பனி நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களில் 30 சதவீதத்தை நிரப்ப அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையினபடி, கும்பகோணம், சென்னை உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களில் 1000 பேருக்கு பனி நியமனம் வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரவித்தார்.