விஜய் ரசிகர்களே சீக்கிரம் ரெடியாகுங்கள்..! இன்னைக்கு உங்களுக்கு டபுள் ட்ரீட்!!

vijay-fans-get-ready-soon-double-treat-for-you-today-full-details-here-click-now

vijay-fans-get-ready-soon-double-treat-for-you-today-full-details-here-click-now

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் தன் நடிப்பால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிபோட்டுள்ளார். இவர் நடித்த பல படங்கள் ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில், தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் “லியோ” என்ற படத்தை நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜயுடன் சஞ்சய்தத், திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. கனகராஜ் கூட்டனியில் விஜய் நடிக்கும் இப்படம் ஆரம்பித்தில் இருந்தே ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதற்கான ப்ரோமோவையும் படக்குழு 2 தினங்களுக்கு முன் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வகையில், தற்பொழுது லியோ படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள ‘நா ரெடி’ பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், படத்தின் இரண்டாவது போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் இந்த பாடல் வெளியாவதற்காக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *