வாட்ஸ்அப் நிறுவனம் ஆனது புதிதுபுதிதாக அப்டேட்களை கொண்டுவருகிறது. இந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன் கால், மெசேஜ், ஸ்டேட்டஸ் பார் கீழே இருக்கும் படி அப்டேட் வழங்க இருப்பதாக அறிவித்துதது. இந்நிலையில், தற்போது புதிதாக PASSKEY எனும் அம்சம் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த PASSKEY அம்சம் ஆனது பயனாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய அம்சமானது வாட்ஸ்அப் அக்கொண்ட் ஹேக் செய்யப்படுவதில் இருந்து தப்பிக்கவும் உபயோகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாட்ஸ்அப் அக்கொண்ட்டை 4 டிவைஸ்களில் லாகின் செய்யும் அப்டேட் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை பாதுகாக்கும் வகையில் புது அப்டேட் வழக்கப்பட்டுள்ளது. என்னவென்றால் , பயனர்கள் வாட்ஸ்அப் அக்கொண்ட்டை லாகின் செய்யும் போது Fingerprint, Face lock மற்றும் Email மூலமாக லாகின் செய்யும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சமானது கூடிய விரைவில் பயனாளர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.