ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

local-holiday-in-erode-03-aug-2023

local-holiday-in-erode-03-aug-2023

ஈரோடு மாவட்டத்தில் ஆக. 03ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆக. 03 ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் ஆக. 03 ம் தேதி (புதன்கிழமை) ஆடி பெருக்கு நன்னாளை முன்னிட்டு சேலம், தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நாளில் மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு அதிகம் செல்வர் இதனை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதாவது ஆக. 03 ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் இவரது நினைவு தினம் பெரும்பாலான சமூக அமைப்புகள் மற்றும் அரசால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் நாளைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *