நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1000 காலியிடங்கள் அறிவிப்பு!

‘நான் முதல்வன்’ என்பது மாநிலத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தத
உருவாக்க, மாண்புமிகு தமிழ்நாடு முதலதமச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட தொலைநோக்கு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுகளில் சிறந்து விளங்க தேவையான உதவிகளை செய்வதையே முதன்மையான நோக்கமாக கொண்டு துவங்கப்பட்டது.

இப்பிரிவானது போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு தேவையான விரிவான பயிற்சி திறன்கள் மற்றும் பிற உதவிகளை எளிதில் அணுகக்கூடிய வண்ணம் செயல்பட்டு வருகிறது. இது குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசால் எடுக்கப்பட்டிருக்கும் மாபெரும் முயற்சியாகும்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1000 காலியிடங்கள் அறிவிப்பு

TNSDC அதன் கீழ் உள்ள நான் முதல்வன் போட்டி தேர்வுகள்
பிரிவு மூலம், 26.05.2024 அன்று நடைபெறவிருக்கும் ஒன்றிய அரசின் குடிமை ப்
பணிகள் முதல் நிலை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு 10.09.2023
அன்று “NAAN MUDHALVAN UPSC PRELIMS SCHOLARSHIP EXAM 2023”
எனப்படும் மதிப்பீட்டு தேர்வை நடத்தி, தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 7,500 பத்து மாதங்களுக்கு வழங்கப்படும்.

அமைப்பு:

தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டம்

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 1000

கல்வித் தகுதி:

ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை:

ரூ. 7,500

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 21 years

அதிகபட்ச வயது – 35 years

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

முக்கிய தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி – 02.08.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 17.08.2023

தேர்வு நடைபெறும் நாள் – 10.09.2023 (10.00 am – 1.00 pm)

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் வெளியீடு நாள் – 22.09.2023

சான்றிதழ் சரிபார்ப்பு தேதி – 25.09.2023

பயிற்சி வகுப்பின் தொடக்க தேதி – 02.10.2023

தேர்வு செய்யும் முறை:

நுழைவு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு முறை

Mode of Exam – Objective Type (OMR based)

Total No. of Questions – 150 (100 GS + 50 CSAT)

Exam Duration – 3 Hours

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் தேர்வு எழுத ஏதேனும் ஒரு
மையத்தை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு மையத்தின் இடம்
நுழைவு சீட்டில் குறிப்பிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

குறிப்பு: தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

மேலும் கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும்:

Phone: 9043710214 / 9043710211

Email: nmcegrievances@naanmudhalvan.in

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *