நீங்க வாங்கும் மாத்திரை போலியானதான்னு கண்டுபிடிக்கணுமா? இனி ஈஸியா கண்டுபிடிக்கலாம்..!

வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானம் வளர வளர மனிதர்களுக்கு ஏற்படும் தீங்கு விளைவுகளும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அந்த வகையில், ஏழை, எளிய மக்கள் முதல் பெரிய பெரிய கோடிஸ்வரர்கள் வரை அனைவரும் உடல்நலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை சரிசெய்ய மருந்துகளை உட்கொண்டு வருகின்றனர். ஆனால், கடந்த சில வருடங்களாகவே போலி மருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், போலி மருந்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மக்கள் பொதுவாகப் பயன்படுத்தும் உயிர்காக்கும் 300 மருந்து அட்டைகளிளல் QR Code அச்சிடுவதை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, ஆகஸ்ட் 1 ஆம் தேதி(இன்று) முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகின்றது.

Want to find out if the pill you are buying is fake Lets find Easia now read it

இதையடுத்து, மருந்து அட்டைகளில் அச்சிடப்பட்டிருக்கும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யும் போது மருந்தின் உற்பத்தி, தொகுதி எண் மற்றும் முக்கிய விவரங்கள் அனைத்தும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். முதற்கட்டமாக நோய் எதிர்ப்பு மாத்திரைகள், இதய நோய் மாத்திரைகள், வலி நிவாரணிகள், நீரிழிவு எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை எதிர்ப்பு போன்ற மருந்துகளில் க்யூ ஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *