கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000.. விண்ணப்பத்தை வாங்க போறீங்களா.. முதலில் இதை படிச்சிடுங்க!

/you-can-appeal-for-rs-1000-under-the-kalaingar-housewives-scheme-if-you-are-not-selected-on-first

/you-can-appeal-for-rs-1000-under-the-kalaingar-housewives-scheme-if-you-are-not-selected-on-first

 

மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

இதை படிக்காம போயிடாதீங்க !

 Download Kalaignar Magalir Urimaithogai Application Form:

அதற்கான பணிகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம் ஜூலை 20 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  இது தொடர்பாக வீடு வீடாக விண்ணப்பங்கள் டோக்கன்கள் அளிக்க வேண்டும். விண்ணப்பங்களை அளிக்கும் முகாம், யார் எந்த நாளில் முகாமில் பங்கேற்பது போன்றவை படிவத்தில் இருக்க வேண்டும். முகாம் நடக்கும் இடம் குறித்து நியாய விலைக் கடைகளில் தமிழில் பலகை அமைக்க வேண்டும் என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியிருக்கிறார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *