தமிழகத்தில் இன்றும், நாளையும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! எதற்கு தெரியுமா?

Nobody has a new ration card anymore Tamilnadu governments new order released just now read it

பொதுவாக தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களின் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக கானாப்படுவது வழக்கம். வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வேற ஊர்களுக்கு சென்றவர்கள் வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த வாரத்தின் இறுதி நாளான இன்றும்(ஜூலை 15) நாளையும் (ஜூலை 16) சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக மிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்றும், நாளையும் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட உள்ளது, அவற்றில், சென்னையில் இருந்து 300 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *